தென்னிந்தியாவை ஆட்டிப் படைக்கும் பிக்பாஸ் காய்ச்சல்!

0
323

பிக் பிரதர்ஸ் என்ற நிகழ்ச்சி ஏற்கனவே உலகளவில் மிகவும் பிரபலம். அதிலும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சி பதினோராவது சீசன் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் பிக் பாஸ் சீசன் இரண்டு சமீபத்தில் ஆரம்பித்திருந்தது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 2 ஐ கமல்ஹஸன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் மலையாளத்திலும் களை கட்டி வருகிறது. நேற்று முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கியுள்ளது. வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மோகன்லால் இந்த டிவி நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் இரண்டு முறை தோன்றுவதற்கு மட்டும் அவர் இந்த சீசனுக்கு 12 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார்.

இது சினிமாவில் அவர் வாங்கும் சம்பளத்தை விட மிக அதிகம் என்பதால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். எப்படியோ , தமிழ்நாடும் கேரளாவும் வரும் நூறு நாட்களுக்கு பிக் போஸ்க்குள் மூழ்கி இருக்கப்போவது மட்டும் உறுதி.

Tag: Bigg Boss Season Start Tamilnadu Kerala