ஈழத்தை உலுக்கிய றெஜீனாவின் படுகொலை; பொங்கியெழுந்த மக்கள்

0
301
6 year old girl murdered Jaffna protest school students

சுழிபுரம் காட்டுப்புலத்தில் 06 வயதுடைய மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து, காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (6 year old girl murdered Jaffna protest school students)

காட்டுப்புலத்தில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து, அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்து சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுழிபுரம் பாணவெட்டை பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி துன்புறுத்தல்களின் பின்னர், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடலிலுள்ள அடையாளங்களை வைத்து நம்பப்படுகின்றது.

எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உறுதி செய்ய முடியும் என தடயவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா என்ற 6 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும், நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், தடயப் பொருள்களையும் மீட்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் நேரடி விசாரணைகள் மேற்கொண்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, சிறுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

tags :- 6 year old girl murdered Jaffna protest school students

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites