புகையிரதத்தில் பாய்ந்து நபர் தற்கொலை!

0
164
45 year old man committed suicide

தலவாக்கலை வட்டகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் சென்ற புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துள்ளார். (45 year old man committed suicide)

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னால் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 45 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

tags :- 45 year old man committed suicide

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites