சுரங்கத்திற்குள் மாட்டிய பெண்!

0
35

பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில், பெண் ஒருவர் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் உள்ள மனித எலும்புகள் அடங்கிய குகைக்குள் சிக்கிக்கொண்டுள்ளார். woman fell insidee mining France

பரிஸின் ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள நிலக்கீழ் மண்டையோட்டு சுரங்கத்தின் 4 மீட்டர் நீளமுள்ள குழிக்குள் பெண் ஒருவர் விழுந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குறித்த பெண்ணை பலத்த போராட்டத்தின் மத்தியில் மீட்டுள்ளனர்.

மிக ஒடுங்கிய குழி என்பதால் பெண்ணை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 5.25 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. குறித்த பெண்ணுக்கு தொடை எலும்பு முறிந்துள்ளதாகவும், மருத்துவமனைக்கு SAMU மருத்துவர்கள் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். இதுதவிர, தீயணைப்பு படை வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்