இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… : குசல் பெரேராவின் உபாதை குறித்த புதிய தகவல்!!!

0
507
Kusal Perera discharged injury update news

மே.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, உபாதைக்குள்ளாகிய குசல் ஜனித் பெரேரா வைத்தியசாலையிலிருந்து அணியின் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது எல்லைக்கோட்டுக்கு அருகில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குசல் பெரேரா, விளம்பரப் பலகையில் மோதுண்டு கடுமையான உபாதைக்கு உள்ளாகினார்.

இதனையடுத்து உடனடியாக அம்புயூலன்ஸ் மூலமாக அருகிலிருந்த பிரிட்ஜ்டவுண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இவருக்கான ஸ்கேன் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், குசல் பெரேரா அபாயத்தை தாண்டியுள்ளார். அவர் நாளைய ஆட்டநேரத்தின் போது, தேவைப்பட்டால் துடுப்பெடுத்தாட முடியும். எனினும் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை தகவல்களும் குசல் பெரேரா முழுமையாக உபாதையிலிருந்து நீங்கியுள்ளதாகவும், இதனால் அவர் வைத்தியசாலையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறவேண்டுமாயின், 5 விக்கட்டுகள் கைவசம் இருக்க 63 ஓட்டங்களை பெறவேண்டும்.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Kusal Perera discharged injury update news,Kusal Perera discharged injury update news, Kusal Perera discharged injury update news