புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம் : விரைவில் அறிவிப்பு..!

0
347
Vadivelu agreed act Imsai Arasan 24amPulikesi,Vadivelu agreed act Imsai Arasan,Vadivelu agreed act Imsai,Vadivelu agreed act,Vadivelu agreed
Photo Credit : Google Image

இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.(Vadivelu agreed act Imsai Arasan 24amPulikesi)

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.

இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.

இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது.

பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.

இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தம் : பெரும் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-Vadivelu agreed act Imsai Arasan 24amPulikesi

Our Other Sites News :-

பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்