இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவு செய்வதை அமெரிக்க உறுதிசெய்யும்

0
197
UN diplomat Jayantha Dhanapala ensure fulfillment promises UNHRC

(UN diplomat Jayantha Dhanapala ensure fulfillment promises UNHRC)

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையகத்திற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்க உறுதிசெய்யும் என ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது நேச நாடுகளின் ஊடாக அதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.

அமெரிக்காவின் முன்னையை குடியரசுக் கட்சி அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் பிரச்சினைகள் இருந்தன.

அவர்கள் அதிலிருந்து விலகி பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர்.

இஸ்ரேல் தொடர்பான பிரேரணைகளே, அமெரிக்காவிற்கான பாரிய பிரச்சினையாக உள்ளது.

இலங்கையின் பிரேரணைகள் அந்த நாட்டுக்கு பிரச்சினையில்லை என ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

(UN diplomat Jayantha Dhanapala ensure fulfillment promises UNHRC)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites