இன்றைய ராசி பலன் 25-06-2018

0
41
Today Horoscope 25-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 11ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி,
25.6.18 திங்கட்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 7:15 வரை;
அதன் பின் திரயோதசி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 7:34 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today Horoscope 25-06-2018 )

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், முருகன் வழிபாடு.

மேஷம்:

குடும்ப விவகாரத்தி்ல் நல்ல தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். நெருங்கிய நண்பருக்கு உதவுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

 

ரிஷபம்:

முன்யோசனையுடன் பிறரிடம் இருந்து உதவி பெறுவது நல்லது. கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வேண்டாம். பிள்ளைகளால் உதவி உண்டு.

மிதுனம்:

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கடகம்:

பிறரின் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். முக்கிய செயல் நிறைவேறுவதில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

சிம்மம்:

சிலரது பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

கன்னி:

பிறரது நல்ல கருத்தை ஏற்றுக் கொள்வீ்ர்கள். குடும்பத்தினர் ஆதரவுடன் செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். கடன் அடைபடும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்

துலாம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

விருச்சிகம்:

புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். மனதில் உற்சாகம் நிலைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராகும். வெகுநாள் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

தனுசு:

அனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். அடுத்தவரின் சூழ்நிலை அறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் திடீர் செலவால் கரையும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்:

பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கும்பம்:

நண்பருக்கு உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாயம் அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

மீனம்:

சிலரின் விமர்சனம் வருத்தம் தரலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் ஏற்படலாம். மாணவர்கள் பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். உறவினர்களின் ஆதரவு ஆறுதல் தரும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 25-06-2018