டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

0
44
Tamizhpadam 20 17th poster released yesterday,Tamizhpadam 20 17th poster released,Tamizhpadam 20 17th poster,Tamizhpadam 20 17th,Tamizhpadam 20
Photo Credit : Google Image

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகும் “தமிழ்படம் 2.0” படத்தின் 17-வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.(Tamizhpadam 20 17th poster released yesterday)

அதாவது, கடந்த 2010-ம் ஆண்டில் சிவா நடிப்பில் வெளியான படம் ”தமிழ்ப்படம்”. ஸ்பூஃப் ஜானரில் (நய்யாண்டி) வெளிவந்திருந்த இந்தப் படம் தமிழ் திரைப்படங்களில் பின்பற்றும் ஃபார்முலாக்களையும், பல படங்களின் சீன்களையும் கிண்டலடித்ததோடு, பல நடிகர்களையும் நய்யாண்டி செய்திருந்தது.

இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். அதுவரையிலான தமிழ் திரைப்படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக மேற்கொள்ளப்பட்ட அமுதனின் அந்த முயற்சி வெற்றியைத் தந்தது. சினிமா ரசிகர்களும் படத்தை வெகுவாக ரசித்தனர்.

இதையடுத்து ”தமிழ்ப்படம் 2.0” என்ற பெயரில் ”தமிழ்ப்படம்” இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சிவாவுக்கு ஜோடியாக திஷா பாண்டே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் தோன்றுகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டரில் தமிழ்நாட்டு அரசியலைக் கலாய்த்து வெளியிட்டிருந்தது படக்குழு. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மெரினாவில் தியானம் செய்தது போன்று சிவா அமர்ந்து தியானம் செய்யும் காட்சி போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரிக்கச் செய்திருந்தது.

இதனையடுத்து, இப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், டீஸர் வெளியிடப்பட்டது. இதில் அஜித், விஜய், விஷால், விஜய் சேதுபதி என ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் கலாய்த்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ”பிக்பாஸ்” வீட்டில், தாடி பாலாஜி, நித்யா, மும்தாஜ் இடையே நடந்த வெங்காயப் பிரச்னையை கலாய்த்தும் போஸ்டர் வெளியிட்டனர். இதில் எனக்கு வெங்காயமே தேவையில்லை நான் அப்படியே சாப்பிடுவேன் என பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தின் 17-வது போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ”டிக்டிக்டிக்” படத்தை கலாய்கும் விதத்தில் அமைத்துள்ளனர்.

மேலும், விண்வெளியில் லுங்கி கட்டிக்கொண்டு சீட்டு ஆடுவது போன்று போஸ்டர் வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்டில் வெளியாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தம் : பெரும் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-Tamizhpadam 20 17th poster released yesterday

Our Other Sites News :-

பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்