நான் திருடன்தான் என்றால், என்னையும் சிறையில் அடையுங்கள் – நாமல் ராஜபக்ஷ விரக்தி

0
137
tamil news namal said mahinda only fire under world gangs

(tamilnews taken one hundred rupees Aloysius jail thief Namal rajapaksha)

பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து நான் 100 ரூபாயையேனும் பெற்றிருந்தால், நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய நானும் சந்தேகநபர்தான் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அர்ஜூன் அலோசியஸ் அரசாங்கத்தின் சாட்சியாளராக இருந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விதாரன்தெனிய பகுதியில் இன்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மேலும், கருத்து தெரிவித்த அவர், நாங்கள் திருடர்கள் என்று எங்களை விரல் நீட்டி காட்டியவர்கள் இன்று அலோசியஸ் முதலாளியின் சாராயத்தை பிரிக்க ஆரம்பித்துள்ளனர்.

பார்க்கும் போது விநியோகிப்பதும் இவர்கள் தான், அலோசியஸிடம் பணம் பெற்ற ஒரு பகுதியினர் பற்றிய தகவல்களே வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசாங்கம் வங்கிகளை கொள்ளையிட்டது போன்று நாட்டில் மேலும் பல கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.

எனக்கு அலோசியஸ் 800 முறை தொலைபேசி அழைப்பு கொடுத்திருந்தால், என்னிடம் வழங்கப்பட்ட பணம் இருந்தால் அவற்றை கண்டுபிடித்து என்னை சிறையில் அடையுங்கள்.

ஆனால், பணத்தை பெற்றவர்களையும் சிறையில் அடையுங்கள். அப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக சிறையில் இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(tamilnews taken one hundred rupees Aloysius jail thief Namal rajapaksha)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites