நாளை விசேட அறிவிப்பு : ஞான­சா­ர­தேரர் தெரிவிப்பு

0
386
Golagoda Athe Ghnanasara Thera considering benefit Sri Lankan Muslims

நாளை செவ்­வாய்க்­கி­ழமை விசேட செய்­தி­யொன்­றினை வெளி­யி­ட­வுள்­ள­தாக பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சா­ர­தேரர் தெரி­வித்தார்.(galagoda special statement)

காணாமல் ஆக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் வைத்து ஞான­சார தேரர் அச்­சு­றுத்­தி­ய­தாக தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கில் ஞான­சா­ர­தே­ர­ருக்கு கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத்­தண்­ட­னைக்கு எதி­ராக ஞான­சா­ர­தேரர் சார்பில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது.
மேன்­மு­றை­யீட்டு மனுவை விசா­ரித்த ஹோமா­கம நீதி­மன்ற நீதிவான் ஞான­சார தேரரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறு­மதி வாய்ந்த இரு சரீர பிணையில் விடு­தலை செய்தார்.
நீதி­மன்றின் அனு­ம­தி­யின்றி வெளி­நாட்டு விஜ­யத்­தினை மேற்­கொள்ள முடி­யாது என்ற நிபந்­த­னை­யு­ட­னான பிணை வழங்­கினார்.
பிணைப்­பத்­தி­ரத்தில் கைச்­சாத்­திட்ட ஞான­சா­ர­தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்ற வளா­கத்­தை­விட்டு வெளி­யே­றி­ய­போது ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை (நாளை) விசேட செய்­தி­யொன்­றி­னையும் வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் சங்க சட்டத்தையும் நீதிமன்ற சட்டத்தையும் காப்பாற்றிக் கொண்டு தண்டனை அனுபவித்ததாகவும் அவர் கூறினார்.

tags :- galagoda special statement

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites