இன்டர்நெட்டில் நாம் நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு பிரபலத்தை நீங்கள் கண்டிருக்கவே முடியாது. கல்பனா அக்கா, மண்ணை சாதிக்கில் துவங்கி சித்ரா கஜோல் வரை பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்-அப் என தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள். (Ashraful Alom Saeed Love Story Latest Gossip)
இவர்கள் எல்லாம் டப்ஸ்மேஷ், ஆடல், பாடலில் மட்டும் தான் வல்லவர்கள். ஆனால், அண்ணன், கன்னிகளின் காதல் மன்னன் எங்கள் ஹீரோ அலாம் இவர்களுக்கு எல்லாருக்கும் மேல் ஒரு டாப் ஸ்டார். இவர் நடிப்பு, சண்டை காட்சி, டான்ஸ், செண்டிமெண்ட் என்று அனைத்திலும் இறங்கி அடிக்கும் வித்தை கற்ற கில்லாடி.
பெரும்பாலும் இவரை நீங்கள் ஃபேஸ்புக் பதிவுகளில் கண்டு ரசித்திருக்கலாம். ஆனால், இவரை பற்றிய உண்மை விபரங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இதோ… ஹீரோ அலாமின் வரலாறு, புவியியல், வேதியல் மற்றும்
இவரது முழுப்பெயர் அஷ்ரபுல் அலாம் சாயித். ஆனால், இவரை ஹீரோ அலாம் என்று கூறினால் தான் சமூக தள உலகிற்கு தெரியும். கருப்பும் அழகு என்பதை, கருப்பாக இருந்தாலும் பெண்களை ரசிப்பார்கள் என்பதை சமூக தள உலகிற்கு எடுத்துரைத்த மகா கலைஞன் ஹீரோ அலாம்.
ஒருபுறம் நிறைய அழகான இளம் பெண்களின் காதல் நாயகனாக வீடியோக்களில் தோன்றும் ஹீரோ அலாம். மற்றொருபுறம் யூடியூப்பில் ஒரு முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட்டிலேயே சில பெரும் புள்ளிகள் தங்கள் வீடியோக்களுக்கு மில்லியன் பார்வைகள் கிடைக்குமா என்று சந்தேகித்து கொண்டிருக்கும் போது. ஹீரோ அலாமின் வீடியோக்கள் அசால்ட்டாக மில்லியன் பார்வைகள் பெறுகின்றன.
ஹீரோ அலாம் திட்டமிட்டு எல்லாம் திரை உலகில் களமிறங்கவில்லை. சொல்லப் போனால் இதை ஒரு விபத்து என்று தான் கூறவேண்டும். நடிப்பு துறைக்குள் வருவதற்கு முன் ஹீரோ அலாம் சிடி விற்கும் தொழில் செய்து வந்திருக்கிறார். பிறகு, தானாக ஒரு லோக்கல் சேட்டிலைட் டிவி துவங்கி. பிறகு, தனது திறமையை இசை விடியோக்கள் தயாரித்து, நடித்து வெளியிட்டு உலகிற்கு காட்சிப் படுத்த துவங்கினார் ஹீரோ அலாம். இதெல்லாம் ஒரு சின்ன ஹாபி தான் ஹீரோ அலாமிற்கு.
நம்ம ஊரில் எப்படி வைகை புயல் வடிவேலு இல்லை என்றால் மீம்ஸ் இல்லையோ. அதே போல வங்காள தேசத்தில் நம்ம ஹீரோ அலாம் இல்லை என்றால் மீம்ஸ் இல்லை. வங்காள தேசம், வட இந்தியா போன்ற பகுதிகளில் வாழும் பல மீம் கிரியேட்டர்களுக்கு ஹீரோ அலாம் தான் மீம்ஸ் கடவுள். இவர் இல்லையேல் மீம் டெம்ப்ளேட்ஸ் இல்லை.
இப்போது வரை தனது சொந்த தயாரிப்புள் வீடியோக்கள் எடுத்து பல இளம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் ஹீரோ அலாம். இதுவரை இவர் எந்தவொரு “வுட்”டிலும் கால் பதிக்கவில்லை. அதனால் தான் பல கான்கள், சிங்குகள் தப்பித்து வருகிறார்கள். இல்லையேல் டங்கலின் இரண்டாயிரம் கோடி வசூல் எல்லாம் ஹீரோ அலாமிற்கு ஜுஜுபி
.
இப்போது யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் தனது ரசிகர்களை தொடர்பு கொண்டு வரும் ஹீரோ அலாமை நேரில் காண வேண்டும் என்றால் போக்ரா (Bogra) எனும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
இப்பகுதி வங்காள தேசத்தில் இருக்கிறது. போக்ரா அருகே இருக்கும் எருலியா (Erulia) என்ற ஊரில் தான் வசித்து வருகிறார் ஹீரோ அலாம். ஸ்டார்! ஹீரோ அலாம் எப்போதும் அழகிய இளம் பெண்களுடன் தான் ஜோடி சேருவார். இவருக்கு பல ஆயிரக்கனாகான இளம் பெண்கள் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வட இந்திய யூடியூப் சேனல் ஹீரோ அலாம் குறித்து இளம் பெண்கள் மத்தியில் எடுத்த வீடியோ மிகவும் வைரலாகி, அவரது ஸ்டார் அந்தஸ்தையும் உயர்த்தியது. குடும்பம்! பல அழகிய இளம் பெண்கள் ஹீரோ அலாமை விரும்பலாம். ஆனால், திருமணம் செய்துக் கொள்ள இயலாது. ஏனெனில் ஹீரோ அலாமிற்கு திருமணமாகிவிட்டது. இவரது மனைவியின் பெயர் சுமி. இவருக்கு ஆலோ மற்றும் கபீர் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
Photo Source :Google
News Source :tamil.boldsky.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com