கொழும்பில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூடு : குறிவைக்கப்பட்ட இராணுவ அதிகாரி

0
117
Army Corporal sustains injuries shooting incident Ratmalana morning

கொழும்பு, இரத்மலானை – சாக்கிந்தாராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.(Army Corporal sustains injuries shooting incident Ratmalana morning)

இன்று காலை 7.20 மணியளவில் குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டியிலும் வந்த இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்துள்ள இராணுவ அதிகாரி, களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே காயமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

tags :- Army Corporal sustains injuries shooting incident Ratmalana morning

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites