டிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்!

0
40

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். America President Trump Refugee Children Issue

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 20-ம் திகதி நிலவரப்படி, சுமார் 2053 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை செய்தித்தொடர்பாளராக இருக்கும் சாரா சாண்டர்ஸ், நேற்று தனது குடும்பத்தினருடன் விர்ஜீனியா பகுதியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த உணவக உரிமையாளர் ஸ்டெபானி வில்கின்சன், டிரம்பின் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு உணவளிக்க மறுத்ததோடு உடனடியாக உணவகத்தைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதையடுத்து வெறு வழியின்றி அவர் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள மெக்சிகன் உணவத்திற்கு சென்ற அமெரிக்க உள்துறை செயலாளர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இதே காரணத்திற்கான உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.