150 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – சாரதியும் உதவியாளரும் படுகாயம்

0
137
Thalawakalai Lindula small van left road jumped 150 feet pit

(Thalawakalai Lindula small van left road jumped 150 feet pit)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிறிய ரக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

அதில் பயணஞ் செய்த சாரதியும் மற்றொருவரும் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து டயகம பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் முதலில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Thalawakalai Lindula small van left road jumped 150 feet pit)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites