“நீதியரசர் பேசுகிறார்” – சீ.வி.விக்கியின் நூல் வெளியீட்டில் கூட்டமைப்பின் முரண்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு

0
128
tamlnews neediyarasar pesugirar jaffna book launch cv vicky

(tamlnews neediyarasar pesugirar jaffna book launch cv vicky)

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ்.வீ.விக்கினேஸ்வரனின் “நீதியரசர் பேசுகிறார்“ எனும் நூல் இன்று (24) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முதலமைச்சரிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளியிட்டு வைக்க முதலமைச்சரின் சகோதரி பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட ஏனையவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருத்த பிரதம விருந்தினர் சம்மந்தன் உட்பட ஏனைய விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கியதுடன் கெளரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு முரண்பட்டு நிற்கின்ற வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டு நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

“நீதியரசர் பேசுகிறார்“ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கு மேலாக ஒரே கட்சியில் இருந்து கொண்டு தொடர்ந்தும் வெளிப்படையாகவே முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்றிருந்தனர்.

(tamlnews neediyarasar pesugirar jaffna book launch cv vicky)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites