யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே கத்திக்குத்து – இரண்டு பேர் கவலைக்கிடம்

0
311
tamilnews jaffna university sinhala management students knife attack

(tamilnews jaffna university sinhala management students knife attack)

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக தமிழ் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

26 வயது மதிக்கத்தக்க ஜயசூர்ய மற்றும் சன்ருவான் ஆகிய இரண்டு மாணவர்களே கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு முதுகிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதியாண்டு சிங்கள மாணவர்கள் நீண்ட நாள்களாக இரண்டு தரப்பினராக செயற்படுகின்றனர்.

ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றைய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது மாணவர் ஒருவர் கத்தியை எடுத்து இருவரைக் குத்தியுள்ளார்” என்று விசாரணையின் போது சக மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைகலப்பில் மேலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(tamilnews jaffna university sinhala management students knife attack)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites