சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

0
295
suspects arrest brutal kill leopard kilinonochi remand Tamil latest news

கிளிநொச்சியில் சிறுத்தையை பொல்லுகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  suspects arrest brutal kill leopard kilinonochi remand Tamil latest news

இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று பொது மக்களை தாக்கி வந்த நிலையில் அதனை பிடிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த அதிகாரிகளினால் பிடிக்க முடியாமல் போனதை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்களால் சிறுத்தை மடக்கி பிடிக்கப்பட்டு பொல்லுகளால் தாக்கி கொலை செய்யப்பட்டது.

குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து குறித்த காணொளியை ஆதரமாக கொண்டு தொடர்புடையவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கமையவே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- suspects arrest brutal kill leopard kilinonochi remand Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites