ஜனாதிபதி மற்றும் பிரதமரை விரைவில் ஒரே மேசையில் சந்திப்பேன்!

0
186
president maithripala prime minister ranil meet soon sampanthan

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்  எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. president maithripala prime minister ranil meet soon sampanthan

இதற்கமைய, குறித்த இருவரிடமும் தனித்தனியாகச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இருவருடனும் பல்வேறு விடயங்கள் தொடர்பான விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை என்பன துரிதப்படுத்தப்பட வேண்டும் என இருவரிடமும் தான் வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியோக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில்  இடம்பெற்ற முக்கிய பிரமுகர் ஒருவருடைய குடும்ப திருமண வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சம்பந்தன் தனியாக அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இதன்போது மூன்று விடயங்களை தான் வலியுறுத்தியதாக எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்பன துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த வாரமும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து இந்த விடயங்கள் குறித்து சம்பந்தன் பேசியிருந்தார். குறிப்பாக அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருந்தமையையும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

தாமதமின்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக சம்பந்தனிடம் நேற்று முன்தினம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த சம்பந்தன் அரசியலமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை காணி விடுவிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளார்.

அரசியலமைப்பாக்க முயற்சிகளைப் பொறுத்தவரை இம்மாத இறுதிக்குள் வழிநடத்தல் குழுவுக்கு நிபுணர் குழுவின் அறிக்கையை கையளிப்பதற்கு முயற்சிப்பதாக பிரதமர் வாக்குறுதியளித்திருக்கின்றார்.

இந்த முயற்சிகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக ஒரே மேசையில் சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மிக விரைவில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

tags :- president maithripala prime minister ranil meet soon sampanthan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites