பாகிஸ்தானிய தலிபான்கள் தெரிவு செய்த புதிய தலைவர்

0
143
Pakistani Taliban appoints new leader deadly drone strike

(Pakistani Taliban appoints new leader deadly drone strike)
பாகிஸ்தானில் செயற்படும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தை அடுத்து தமக்கான புதிய தலைவரை அந்த இயக்கம் தெரிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் இயங்கும் தலிபான்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறனர்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இதனையடுத்து தங்களது புதிய தலைமையை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த முகமது குரசானி கருத்து தெரிவிக்கையில், முல்லா ஃபஷ்லுல்லா கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்களது புதிய தலைவராக முப்தி நூர் வலி மஹ்சூத் என்பவரை புதிய தலைவராக நியமித்ததாக குறிப்பிட்டார்.

முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Pakistani Taliban appoints new leader deadly drone strike)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites