2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!

0
544
prime minister ranil wickramasinghe visit kilinochi today school opening

(government implementing massive programs improve national industries)

நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்தவும், அவற்றை பாதுகாப்பதற்கும் தேவையான பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய கைத்தொழிலை சீர்குழைப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதமர் தேசிய கைத்தொழில் துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில் துறையை கொண்டு செல்வதே தமது நோக்கம் என்று குறிப்பிட்டார்.

மில்லெனிய, பண்டாரகமவில் தனியார் பிஸ்கட் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திராதிகள், கைத்தொழில் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போதும் அறவிடப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டிக்காட்டினார்.

புதிய கைத்தொழில் துறையை சார்ந்தோருக்கு வரி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் கொண்டு வரும்போதும் அதற்காக அறவிடப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தனதுரையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி பெற்றுக் கொடுக்க கூடிய நிறுவனம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், நாம் இந்த வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த துறையை மேம்படுத்துவதற்கு எத்தகைய நிவாரணங்களையும், வசதிகளையும் பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாகவும் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

இதேபோன்று ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கின்றோம்.

அதேபோன்று கடனுக்கான வட்டி அறவீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேவையான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றோம்.

தேசிய உற்பத்திகளின் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு பகுதியை உள்நாட்டு சந்தைக்கு வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

2050 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் சனத்தொகை மேலும் அதிகரிக்கும். நாம் தூரநோக்குடன் சிந்தித்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டே செயற்படுகிறோம்.
அதிக இலாபத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தவும் தேவையான சட்டங்களை தயாரித்து வருகின்றோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

(government implementing massive programs improve national industries)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites