இரண்டு நாட்களில் லிபிய அகதிகள் 200 பேர் கடலில் மூழ்கி மரணம்

0
399
bodies 215 victims recovered ferrying refugees Libya

(bodies 215 victims recovered ferrying refugees Libya)

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் பலியான 215 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

லிபியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் மற்றும் கலவரம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

அவர்கள் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தரைக்கடல் வழியாக 100 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு மரப்படகு சென்றது.

திரிபோலி கடற்பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது.

அதில் 95 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். 5 பேர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், மத்திய தரைக்கடலில் 130 பேருடன் சென்ற மற்றொரு படகும் மூழ்கி விபத்துக்குள்ளானது.

படகில் இருந்த 60 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் லிபியாவிற்கே அழைத்து செல்லப்பட்டனர்.

இதனிடையே, விபத்து நடந்த அடுத்த நாள் திரிபோலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காரபுலி என்ற இடத்தில் ரோந்து சென்ற கடற்படையினர் 50 பேரின் உடல்களை கண்டுபிடித்தனர்.

மேலும் கடற்கரையின் மற்றொரு பகுதியில் 165 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தத்தில் 2 நாளில் 215 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(bodies 215 victims recovered ferrying refugees Libya)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites