யாழில் இளைஞர்களின் அட்டகாசம்; வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்

0
194
Youth attack Jaffna house

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. (Youth attack Jaffna house)

இந்தச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்பாக எனது மகன் கடை நடத்தி வந்தார். அந்தக் கடை இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

தற்போது எனது மகன் வெளிநாட்டிற்குச் சென்று அங்கு வசித்து வருகின்றார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பாக எமது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் எமது மகன் லோஜன் வெளிநாட்டால் வந்துவிட்டாரா? எப்ப வருவார் ?என்று எச்சரிக்கை தொனியில் கேட்டனர்.

இதனையடுத்து, நேற்று இரவு எமது வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் எமது வீட்டு யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அடித்து உடைத்தனர். ஆனால் எதிற்காக என்பது குறித்து எமக்கு இதுவரை தெரியவில்லை.

எனினும் இந்தச் சம்பவம தொடர்பில் நாம் பொலிஸ் அவரச சேவை பிரிவுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தோம். இன்று காலை எமது வீட்டுக்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, எமது வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

tags :- Youth attack Jaffna house

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites