இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு

0
248
two jaffna boys sri lanka under 19 cricket team

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (two jaffna boys sri lanka under 19 cricket team)

இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியிலேயே யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மதுஷன் மற்றும் விஜயகாந் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய தொடருக்கான இலங்கை அணியில் பங்கு பற்றும் வீரர்களின் தெரிவுகள் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த யாழ். இளைஞர்கள் அணியில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த தொடரில் தமது திறமையை வெளிப்படுத்துவார்களாயின் இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இரு தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளதை பலரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- two jaffna boys sri lanka under 19 cricket team

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites