24 தேர்தல் மாவட்டங்களை 48 வலயங்களாக வகுத்து தேர்தல் நடத்துங்கள்

0
363
twenty four district divide 48 zone election province mano ganeshan

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்லை வலய முறையில் நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். (twenty four district divide 48 zone election province mano ganeshan)

அரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை வலய முறையில் நடத்த முடியும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 24 தேர்தல் மாவட்டங்களையும் 48 வலயங்களாக பிரித்து, அதன் பரப்பளவை சிரிதாக்கி தேர்தலை நடத்துவதற்கே 14 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

எனினும் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த திட்டத்தை மையமாக வைத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அதிக கால அவகாசம் தேவைப்படாது.

அத்துடன், கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஏற்பட்ட குறைப்பாடுகளை சரிசெய்து எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

எனவே எந்த முறையிலாவது இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணசபை தேர்தல் காலதாமதமின்றி நடத்தப்படுவதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்துவதற்கான அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டத்திலான சந்திப்பொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு தேர்தல் ஆணைக்குழுவுடன் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்த நாடாளுமன்ற விவாதம் ஒன்று அடுத்த மாதம் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

tags :- twenty four district divide 48 zone election province mano ganeshan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites