இன்றைய ராசி பலன் 23-06-2018

0
427
Today Horoscope 23-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி,
23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை;
அதன்பின் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம்.(Today Horoscope 23-06-2018 )

நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
குளிகை : காலை 6:00–7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : சனீஸ்வரர், பெருமாள், யோகநரசிம்மர் வழிபாடு.

மேஷம்:

உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்:

அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மிதுனம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழிலில் இடையூறுகளை சரிசெய்ய முயல்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மின் உபகரணங்களை கவனமுடன் கையாளவும்.

கடகம்:

அன்றாடப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு உயரும். புத்திரரின் செயல்பாடு கண்டு பெருமிதம் உண்டாகும்.

சிம்மம்:

உற்சாகமுடன் செயல்பட்டு வருவீர்கள். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர்.

கன்னி:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:

முன்யோசனையுடன் இருப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பணவரவுக்கேற்ப செலவும் உயரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

விருச்சிகம்:

சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. தொழிலில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர்.

தனுசு:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் செலவு கூடும். ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

வழக்கத்திற்கு மாறாக பணிச்சுமை அதிகரிக்கும். நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும்.

கும்பம்:

கடந்த கால உழைப்பின் பயனைப் பெறுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் நவீன மாற்றங்களைச் செய்வீர்கள். வருமானம் திருப்தியளிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.+

மீனம்:

பேச்சில் புத்துணர்வு வெளிப்படும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர். கடன் தொல்லை மறையும்.

மேலும் பல சோதிட தகவல்கள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 23-06-2018