நோர்வூட்டில் பஸ்ஸில் சிக்குண்டு வயோதிப பெண் பலி

0
408
tamilnews norwood road accident aged lady died harron road

(tamilnews norwood road accident aged lady died harron road)

ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் யாரென்பது குறித்து தகவல்கள் அறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது, ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் முன்சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இன்று மாலை 5 மணியவில் இடம்பெற்றதாக, பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

(tamilnews norwood road accident aged lady died harron road)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites