அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து

0
573
tamilnews football switzerland wins serbia fifa world cup

(tamilnews football switzerland wins serbia fifa world cup)

21 வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றது.

இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 2-0 என முன்னாள் சாம்பியனான பிரேசில் வெற்றி கொண்டது.

மற்றொரு ஆட்டத்தில் செர்பியாவை 2-1 என சுவிட்சர்லாந்தை வென்று அதிர்ச்சி வைத்தியம் பார்த்தது.

21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெற்று வருகின்றன.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றி கொண்ட, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடுகின்றன.

அதன்படி, ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்தநிலையில், இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2 – 0 என கோஸ்டாரிகாவை வென்றது.

* அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியாவை 2-1 என சுவிட்சர்லாந்தை வென்றது.

* பிரிவு இ சுவிட்சர்லாந்து – செர்பியா 2 – 1.

* இ பிரிவில் இதுவரை செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது.

* பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது.

* பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது.

* சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்றது இ பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. கோஸ்டாரிகா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றிலேயே வெளியேறுகிறது.

இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்றது செர்பியா.

இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது.

இந்த ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50 வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லியான வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார்.

இந்த நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது. நெய்மர் முதல் கோலை அடித்தார். அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியாவுடன் சுவிட்சர்லாந்து விளையாடியது.

ஆரம்பத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தின் ஆட்டமாக இந்த ஆட்டம் அமைந்தது. 62 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது. 20 முறை கோலடிக்கும் வாய்ப்பு அதற்கு கிடைத்தது.

அதில் 5 முறை கோல் பகுதிக்குள் பந்தை அது செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடம் மிட்ரோவிக் கோலடிக்க செர்பியா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியிலும் செர்பியா முன்னிலையுடன் முடித்தது.

(செய்தி மூலம்  : tamil mykhel)

(tamilnews football switzerland wins serbia fifa world cup)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites