மாத்தறை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய இந்திரஜித் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி

0
413
matara robbery chamara indrajith dead police gun shot Tamil latest news

மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். (matara robbery chamara indrajith dead police gun shot Tamil latest news)

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், தன்னிடம் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் பொலிசாரை தாக்க முயற்சித்த வேளையில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே குறித்த நபர் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என தெரிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் 7 பேர் அடங்கிய கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட போது, காவல்துறையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

இதன்போது, காயமடைந்த நிலையில், தலைமறைவாகியிருந்த மூவர், பின்னர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக தற்போதைய நிலையில் கராபிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்

அவரது சகோதரரான மகேஷ் மற்றும் மேலும் ஒருவர் குறித்த மருத்துவமனையில் காவற்துறை அதிரடிப்பிரிவின் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கொள்ளையின் போது இடம்பெற்ற மோதலில், மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட ஐவர் காயமடைந்தனர்.

இதில், ஒரு காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமாகியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தின் பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது வெயாங்கொட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரான சாமர இந்திரஜித் கைது செய்யப்பட்ட அதேவேளை, கொள்ளையர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், தானியக்க துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கொள்ளையில் ஏழு பேர் ஈடுபட்டதுடன் அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- matara robbery chamara indrajith dead police gun shot Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites