மல்லாகம் சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேர் கைது – 14 பேருக்கும்…….!

0
99
mallagam attack fourteen suspects arrest remand twenty nine

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் அறுவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. mallagam attack fourteen suspects arrest remand twenty nine

கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மல்லாகம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்படி இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

tags :- mallagam attack fourteen suspects arrest remand twenty nine

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites