ஊடகங்களை வேறு சக்திகள் இயக்குகின்றதா? விஜயதாச ராஜபக்ஷ கேள்வி….!

0
141
Lankan media under business vijayadasa rajapaksha question parliament

மூன்று வருடங்கள் நீடித்த சைட்டம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு வழங்கப்பட்ட போதும் ஊடகங்கள் அதற்கு முன்னுரிமை வழங்காமல் பிரதி அமைச்சர் ஹரீஸுடனான விவாதத்தை பெரிதுபடுத்தி காண்பித்திருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். Lankan media under business vijayadasa rajapaksha question parliament

சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றும் போதே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

சில ஊடகங்கள் நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கலாமென மக்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சைட்டம் தீர்விற்காக 400 க்கும் அதிகமான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றன இடம்பெற்றன.

இதற்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தன. ஆனால் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது.

சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் பத்திரிகையும் முன்னுரிமை வழங்கவில்லை.

எனக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக பிரதான தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. ஏற்கெனவே நான் கூறிய விடயமொன்று தொடர்பாக பிரதி அமைச்சர் உரையாற்றினார்.

அதற்கு நான் நட்பு ரீதியாக பதில் வழங்கினேன். அதனை மோசமான பெரிய மோதலாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது உகந்ததல்ல என தெரிவித்துள்ளார்.

tags :- Lankan media under business vijayadasa rajapaksha question parliament

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites