சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு

0
472
Kilinochchi Ampalakulam leopard murders taken Magistrate Court

(court ordered arrest involved recent killing minor Kilinochchi)
கிளிநொச்சியில் அண்மையில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (21) பகல் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை, பிரதேசவாசிகளை தாக்க முற்பட்டதாக தெரிவித்து, அங்கிருந்த இளைஞர்கள் சிறுத்தையை அடித்து கொலை செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக தகவல் வெளியிடப்பட்டது.

இதேவேளை, சிறுத்தை மரணமடைந்த பின்னர் சிறுத்தையை கொலை செய்தவர்கள் அதனுடன் புகைப்படங்களையும், காணொளிகளும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்தநிலையில், குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு நேற்று நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

(court ordered arrest involved recent killing minor Kilinochchi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites