125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை

0
209
Colombo High Court announced trial four former customs officials

(Colombo High Court announced trial four former customs officials)

சுமார் 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிபதி சசி மஹேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், அன்றைய தினம் வழக்குடன் சம்பந்தப்பட்ட கணினி சாட்சிகள் அனைத்தையும் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவதால் முறைப்பாட்டாளர்களும் சாட்சியாளர்களும் பாதிப்படைவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன்போது, குறித்த வழக்கை புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஷேட மேல் நீதிமன்றில் விசாரிக்க முடியுமா என்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பான சட்டத்தரணியிடம் நீதிபதி வினவினார்.

எவ்வாறாயினும் வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் சிலவற்றை விடுவிப்பது தொடர்பில் சந்தேகநபர்கள் 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

(Colombo High Court announced trial four former customs officials)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites