அம்மன் கழுத்தில் அணிந்திருந்த பொட்டுத்தாலி கொள்ளை – ஒந்தச்சி மடத்தில் கொள்ளையர்கள் கைவரிசை

0
130
batticolollo onthachimadam Hindu temple jewel robbery police

மட்டக்களப்பு ஒந்தச்சி மடத்தில் இரு இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.       (batticolollo onthachimadam Hindu temple jewel robbery police)

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஓந்தாச்சி மடத்தில் ஆற்றங்கரையோரம் அரச மர நிழலில் அருகருகே அமைந்துள்ள மேற்படி இரண்டு ஆலயங்களும் வெள்ளிக்கிழமை (22) இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளதாக மேற்படி ஆலயங்களின் நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

அம்மன் ஆலயத்தின் முன்னால் இருந்த திரிசூலத்தை எடுத்து ஆலயத்தின் கதவில் குற்றி உடைக்கப்பட்டுள்ளது.

அம்மன் ஆலயத்தின் திரிசூலங்கள் இரண்டு இடங்களில் வீசப்பட்டுக் கிடந்தன.

இவற்றினை விட ஆலயத்தின் தீர்த்தக் கிணற்றிலிருந்த வாழிகளிலிருந்த கயிறுகளை அவிழ்த்து அம்மன் ஆலயத்தின் மேல் ஏறி ஓடுகளைக் களற்றி விட்டு கயிற்றின் வழியாக ஆலயத்தினுள் கள்வர்கள் நுளைந்துள்ளார்கள்.

பின்னர் அம்மனுடைய கழுத்திலே இருந்த தங்கத்திலாலான பொட்டுத்தாலி, பிள்ளையார் தாலி, மற்றும, செயின் ஒன்று, என்பன களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

tags :- batticolollo onthachimadam Hindu temple jewel robbery police

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites