சிலாபத்தில் விபத்து – இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

0
216
accident chilaw lorry tree two person wounded hospital

புத்தளம் – சிலாபம் வீதியின் மங்களஹெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். (accident chilaw lorry tree two person wounded hospital)

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை தொகையொன்றை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மரமொன்றில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

கொள்கலன் பாரவூர்தி சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

tags :- accident chilaw lorry tree two person wounded hospital

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites