நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது

0
298
tamilnews chilaw student leader murder suspects sent reconciliation

(tamilnews student leader worried conflict school students Chilaw)

சிலாபத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவத் தலைவன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சிலாபத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சவறான பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசுல் என்ற 16 வயது மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார்.

கடந்த 15 ஆம் திகதி இரவு 10 மணியளவில் பாடசாலை மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சிலாபம் சவறான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் பல தடவைகள் அவர் விழிந்தெழுந்ததுடன், அனைத்து சம்பவங்களையும், ஆட்களையும் மறந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

(tamilnews student leader worried conflict school students Chilaw)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites