நடு வீதியில் மட்டையான சிறுவன்!

0
37

பத்து வயதுடைய சிறுவன் ஒருவன் பரிஸின் வீதி ஒன்றில் கோமா நிலையில் விழுந்து கிடந்துள்ளான். அதனை பார்த்தவர்கள் மருத்துவ உதவியை அழைத்துள்ளனர். 10 year child fell rue Censier road

இச்சம்பவம், கடந்த வியாழக்கிழமை பரிஸின் 5 ம் வட்டாரத்தில் உள்ள rue Censier வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்ற பாதசாரிகள் சிலர், சிறுவன் ஒருவன் விழுந்து கிடப்பதை பார்த்து உடனடியாக SAMU மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் சிறுவனை மீட்டு 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக குறித்த சிறுவன் முற்றாக மது அருந்தியுள்ளான் எனவும், மீட்கப்படும்போது கோமா நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சிறுவன் தற்போது வரை கோமா நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குறித்த சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்