அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்

0
238
tamilnews MA Sumanthiran Violence terrible events living community

(US withdrawal United Nations Human Rights Commission sumandiran)

அமெரிக்கா ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­ உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வெளி­யே­றி­னா­லும், வெளி­யி­லி­ருந்து கையா­ளக்­கூ­டிய வகை­யில் அவர்­க­ளின் உத­வி­க­ளை பெற்­றுக் கொள்­ள­வும் பேச்சு நடத்­து­வோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அமெ­ரிக்­கா­வின் வெளி­யேற்­றம் எமக்­குப் பாதிப்­பா­னது.

அவர்­கள் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் உறுப்­பி­னர்­க­ளாக இல்­லா­வி­டி­னும், அவர்­கள் ஊடாக விட­யங்­களை எப்­ப­டிச் செய்­விப்­பது என்­பது தொடர்­பில் அமெ­ரிக்­கா­வு­டன் நாங்­கள் பேச்சு நடத்­து­வோம்.

வெளி­யில் இருந்து எப்­படி விட­யங்­க­ளைக் கையா­ள­லாம் என்று ஆராய்­வோம்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அமெ­ரிக்கா தலைமை வகித்து தீர்­மா­னங்­க­ளைக் கொண்டு வரும்­போது, அதற்கு இரண்­டாம் நிலை­யி­லி­ருந்து தலை­மைத்­து­வம் வழங்­கிய பிரிட்­டன் மொன்­டா­ரியோ, மசி­டே­னா­னியா ஆகிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இருக்­கின்­றன. அந்த நாடு­க­ளு­டன் பேச்சு நடத்­து­வோம்.

இலங்கை விவ­கா­ரத்­தில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அமெ­ரிக்கா தலைமை தாங்கி நிறை­வேற்­றிய தீர்­மா­னத்­துக்கு எந்­தப் பாதிப்­பும் வராது.

அந்­தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டி­யது, அத­னைக் கண்­கா­ணிக்­க­வேண்­டி­யது எல்­லாம் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யும், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருமே.

ஆனால் அழுத்­தம் கொடுப்­பது, எதிர்­கால நட­வ­டிக்­கை­கள் தொடர்­பி­லேயே அமெ­ரிக்­கா­வின் தேவை இருக்­கின்­றது. அமெ­ரிக்கா வெளி­யே­றி­னா­லும், உறு­தி­யாக தலை­மைத்­து­வம் வழங்­கக் கூடிய ஏனைய தரப்­புக்­க­ளு­டன் நாங்­கள் பேச்சு நடத்­த­வுள்­ளோம்.

பிரிட்­டன் மற்­றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­டன் இந்­தப் பேச்­சுக்­கள் இடம்­பெ­றும். மாற்று வழி­க­ளாக இதனை ஆராய்­கின்­றோம் – என்­றார்.

(US withdrawal United Nations Human Rights Commission sumandiran)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை