இன்றைய ராசி பலன் 22-06-2018

0
235
Today Horoscope 22-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 8ம் தேதி, ஷவ்வால் 7ம் தேதி,
22.6.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 7:46 வரை;
அதன் பின் தசமி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 5:50 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 22-06-2018 )

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,
பொது : விஷ்ணு மகாலட்சுமி வழிபாடு.

மேஷம்:

பேச்சால் குளறுபடி உருவாகலாம். செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்:

புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பரின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மிதுனம்:

பேச்சில் வசீகரம் உருவாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.

கடகம்:

மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

சிம்மம்:

குடும்ப விஷயங்களை பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில், வியாபார நடைமுறை சீராகும். செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். லாபம் அதிகரிக்கும். நீண்ட கால பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

துலாம்:

கடந்த கால தவறுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரி செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.

விருச்சிகம்:

எதிலும் பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

தனுசு:

கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். பிறருக்கு உதவுவதில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். மாணவர்கள் கூடுதல் கவனமுடன் படித்தால் தேர்ச்சி பெறலாம்.

மகரம்:

சவால்களை ஏற்று முன்னேறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கும்பம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நம்பிக்கையுடன் செயல்படுவதால் தொழிலில் வளர்ச்சி காணலாம். லாபம் சீராக இருக்கும். பெண்கள் நகை, பணத்தை விழிப்புடன் பாதுகாக்க்கவும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

மீனம்:

புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தடைபட்ட பணிகள் கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்

 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 22-06-2018