ஒட்டுசுட்டானில் நள்ளிரவு புலிக்கொடியுடன் ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்

0
231
Tiger flag One person arrested midnight Oddusuddan

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பகுதியில் புலிக்கொடி மற்றும் கிளைமோர்க் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Tiger flag One person arrested midnight Oddusuddan)

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டியை சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புலிக்கொடியுடன் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய இருவர்களில் ஒருவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Tiger flag One person arrested midnight Oddusuddan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites