அத்துமீறிய கடலட்டை பிடிப்பவர்கள் தொடர்பில் துரித தீர்வு வேண்டும்

0
112
Tamil National Alliance talks wijayamuni regarding Sea cucumber

(Tamil National Alliance talks wijayamuni regarding Sea cucumber)

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் அத்துமீறிய கடலட்டை பிடித்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீன்வள அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் மீன்வள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை சந்தித்து வடக்கில் இடம்பெறும் அத்துமீறிய கடலட்டை பிடிப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் கடலட்டை பிடிப்பதற்கு வழங்கிய அனுமதியில் குறிப்பிடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை (இரவில் கடலட்டை பிடித்தல், கடலட்டை பிடித்தல் கரையிலிருந்து குறைந்தது 5 கி.மீ அப்பாலே இடம்பெறவேண்டும்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடைப்பிடிப்பதெனவும் இவற்றினை மீறுவோரின் அனுமதியினை இரத்து செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அமைச்சர் இது தொடர்பிலான பிரச்சினைகளுக்கு முடிவினை காணும் பொருட்டு வடக்கிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்வார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

(Tamil National Alliance talks wijayamuni regarding Sea cucumber)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites