மாத்தறை துப்பாக்கி சூடு CCTV வெளியானது : “கொஸ்கொட தாரக” கைது

0
374
matara gun shooting cctv

மாத்தறையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான “கொஸ்கொட தாரக” உள்ளிட்ட பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (matara gun shooting cctv)

துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் கிடந்த மூவ​ரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.

மாத்தறையில் உள்ள தங்க ஆபரணங்கள் கடையில் கொள்ளையடிக்க முயன்ற குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே நால்வர் காயமடைந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- matara gun shooting cctv

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites