இந்தியாவை எதிரியாக்கியதால் விளைவுகளை அனுபவிக்கிறோம் : மஹிந்த அமரவீர

0
122
mahinda amaraweera india

முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.(mahinda amaraweera india)

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பத்தில் இந்தியா எம்மை ஆதரித்தது.

பின்னர், எதிராகச் செயற்பட்டது. அப்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையே அதற்குக் காரணம்.

நாங்கள் இந்தியாவை எதிரியாக்கியிருக்கிறோம். இது முன்னைய அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு. இந்தியா போரின் போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் எமக்கு உதவியது.

ஆனால், பின்னர் எமக்கு எதிராகச் செயற்பட்டது. ஏனென்றால், அதற்குக் காரணம் எமது கொள்கைகள் தான்.

அதன் விளைவாக நாம் மீன் ஏற்றுமதி தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

tags :- mahinda amaraweera india

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites