அம்பேவெல பகுதியில் விபத்து – லொறி – முச்சக்கரவண்டி மோதி இருவர் படுகாயம்

0
414
Battipola two persons injured accident front Ambevella Milko

(Battipola two persons injured accident front Ambevella Milko)

பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அம்பேவெல பிரதான வீதியில் அம்பேவெல மில்கோ நிறுவனத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 22.06.2018 அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கி சென்ற லொறியும், அம்பேவெல பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பட்டிப்பொல போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Battipola two persons injured accident front Ambevella Milko)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites