கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; 04 பேர் பிணையில் விடுதலை

0
91
Anti Muslims violence Kandy

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (Anti Muslims violence Kandy)

தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய போதே, பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், 5000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்டி திகன பகுதியில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும்பான்மையினத்தவர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட கலவரத்தில் பெருமளவிலான வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டு, முஸ்லிம் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு காரணமாக பலர் கைது செய்யப்பட்டு, தற்பொழுது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 04 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

tags :- Anti Muslims violence Kandy

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites