இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்; அமெரிக்கா

0
130
US assures continued support Sri Lanka quitting UNHRC

இலங்கைக்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் உறுதியளித்துள்ளார். (US assures continued support Sri Lanka quitting UNHRC)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் உயர்மட்ட அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து இலங்கையர்களுக்கும், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்.

இலங்கையும் அமெரிக்காவும், 2015 ஆம் ஆண்டின் 30/1 தீர்மானம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் 34/1 தீர்மானம் ஆகியவற்றில் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

இலங்கை இந்த மிக முக்கியமான வாக்குறுதிகள், கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முழுமையான ஆதரவை அளிக்கும்.

இந்த சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கிய இலங்கையின் முன்னேற்றம், இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலமடைவதற்கும், உலகெங்கும் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து கொள்வதற்கான ஆற்றலையும் இலங்கைக்கு வழங்கும்.

இலங்கையின் முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணிப்போம். ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அமெரிக்கா அதனை ஆதரிக்கும். அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அது உதவும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- US assures continued support Sri Lanka quitting UNHRC

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites