இலங்கையில் அறிமுகமாகவுள்ள குளிரூட்டல் வசதிகொண்ட முச்சக்கர வண்டி

0
180
Three wheeler cool air conditioner Sri Lanka

இலங்கையில் குளிரூட்டல் வசதிகளை கொண்ட புதிய முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (Three wheeler cool air conditioner Sri Lanka)

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி சீனா மற்றும் மலேசிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்.

பால் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கும், திறன் தன்மையில் சிக்கல் ஏற்படாமல் இருப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பொருட்கள் கொண்டு செல்வதற்கு வசதியான வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குளிரூட்டல் வசதிகளை கொண்ட முச்சக்கர வண்டி ஒன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

tags :- Three wheeler cool air conditioner Sri Lanka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை