ஃபிபா உலகக் கிண்ணம் – டென்மார்க்குடன் சமநிலை, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுமா அவுஸ்திரேலியா!

0
460
tamilnews australiya denmark world cut fifa match drew

(tamilnews australiya denmark world cut fifa match drew)

21 வது ஃபிபா உலகக் கிண்ண பிரிவு சுற்றில் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க்குடன் 1-1 என அவுஸ்திரேலியா சமநிலை செய்தது.

அடுத்து நடைபெறும் பிரான்ஸ், பெரு ஆட்டத்தின் முடிவில் தான், அடுத்தச் சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என்பது தெரியவரும்.

21 வது ஃபிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கிண்ண போட்டிக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது.

2014 ல் நடந்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கிண்ண தொடரிலும் விளையாடுகின்றன.

இந்த உலகக் கிண்ணத்துக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடுகின்றன.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன.

சி பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டென்மார்க் அணியுடன் 1-1 என அவுஸ்திரேலியா போட்டியை சமநிலை செய்தது.

அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸை பெரு சந்திக்கிறது. பிரிவு சி டென்மார்க் – அவுஸ்திரேலியா 1 – 1

சி பிரிவில் இதுவரை… * பிரான்ஸ் 2-1 என அவுஸ்திரேலியாவை வென்றது.

* டென்மார்க் 1-0 என பெருவை வென்றது * டென்மார்க் 1 – 1 என அவுஸ்திரேலியாவுடன் சமநிலையில் உள்ளது.

சி பிரிவின் புள்ளிப் பட்டியலில் டென்மார்க் 4 புள்ளிகளுடன் உள்ளது.

பிரான்ஸ் 3, அவுஸ்திரேலியா 1 புள்ளியுடனும் உள்ளன.

பெரு புள்ளி ஏதும் பெறவில்லை. முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதிவரை நுழைந்தது. அவுஸ்திரேலியா 2006 ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியதே அதன் சிறப்பான ஆட்டமாகும்.

கடந்த உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறியது சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வென்றது.

இதன் மூலம் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்தன.

இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க், அவுஸ்திரேலிய அணிகள் போட்டியிட்டன.

அவுஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடியது.

ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் எரிக்சன் கோலடிக்க டென்மார்க் 1-0 என முன்னிலை பெற்றது.

38 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜெடினாக் கோலடிக்க சமநிலை உருவானது.

அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் சமநிலை யில் நிறைவடைந்தது.

அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ், பெரு மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில்தான், அடுத்தச் சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என்பது தெரியும். பிரான்ஸ் வென்றால் அது அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

(tamilnews australiya denmark world cut fifa match drew)

 

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>