சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!

0
255

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. (Sri Lankan Action Against 14 Tamils, including 8 Organizations Overseas)

இதேவேளை இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்ளிட்ட 8 அமைப்புக்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இணைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் இலங்கை அரசாங்கத்தின் கண்காணிப்பு பட்டியலில் இருந்த புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில், திடீரென கைது செய்யப்படுவது வழமை. இம்முறை நேரடியாக அரசாங்கம் இவ்வாறான புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டாளர்களை நேரடியாக குறிவைத்திருக்கின்றது.

tags :- Sri Lankan Action Against 14 Tamils, including 8 Organizations Overseas
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை