ஸ்பெயினிடம் தோல்வி கண்ட ஈரான் – அடுத்தச் சுற்றுக்கு முன்னேற 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி!

0
525
Spain Iran final score recap Hierro team avoids World Cup

(Spain Iran final score recap Hierro team avoids World Cup)

21 வது ஃபிபா உலகக் கிண்ணத் தொடரில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இதில் பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஈரானை ஸ்பெயின் 0-1 என்ற வகையில் வெற்றி கொண்டது.

இதனிடையே, அடுத்தச் சுற்றுக்கு முன்னேற மூன்று அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்கு நுழைந்துள்ளன.

பி பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது.

இரவு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.

பிரிவு பி ஸ்பெயின் – ஈரான் 1 – 0 —- பி பிரிவில் இதுவரை… * ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என சமநிலையானது.

போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது * ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.

பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. மொராக்கோ புள்ளி ஏதும் பெறாமல் வெளியேறியது.

பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகள் மோதின.

அந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியே அனைத்து விதத்திலும் ஈரானை விட முன்னிலையில் இருந்தது.

சமநிலையில் போட்டி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் போஹாதூஸ் சேம் சைட் கோலடிக்க, ஈரான் வென்றது.

உலகக் கிண்ணத் தொடரில் ஈரானுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பி பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதினார் என்று கூறும் அளவுக்கு தனி ஆளாக போர்ச்சுகல் அணியை தூக்கிப் பிடித்தார்
ரொனால்டோ. இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்தார்.

ஸ்பெயினுடன் 3-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் சமநிலை செய்தது.

இந்த நிலையில், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் இன்று விளையாடின.
இதிலும் ரொனால்டோ தனி ஆளாக அசத்தினார். ஆட்டத்தின் 4 வது நிமிடத்திலேயே அற்புதமாக கோலடித்து, போர்ச்சுகல் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதில் 1-0 என போர்ச்சுகல் வென்றது. இந்த நிலையில் இன்று நடந்த பி பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினும் ஈரானும் மோதின.

இதில் ஸ்பெயின் 1-0 என வென்றது. முதல் ஆட்டத்தில் கோலடித்த டியஜோ கோஸ்டா ஸ்பெயின் அணிக்காக இந்த ஆட்டத்தில் கோலடித்தார்.

அதையடுத்து பி பிரிவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இந்த மூன்று அணிகளுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.
இந்த நிலையில், இரண்டு தோல்விகளை சந்தித்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

(Spain Iran final score recap Hierro team avoids World Cup)

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>